
நீதிதுறைக்கு எதிரான பாஜகவின் தீய எதிர்ப்பியக்கத்தை முறியடிப்போம்
அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக மோடி அரசாங்கம் தொடர்ந்து நடத்துகிற போர், இப்போது, அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலரான இந்திய உச்ச நீதிமன்றத்துடன் மோதலுக்கு இட்டுச் சென்றுள்ளது. குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உச்ச நீதிமன்றம் “ஒரு சூப்பர் நாடாளுமன்றம்” போல செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, மூர்க்கத்தனமாக இழிவுபடுத்துவதன் வெளிப்பாடாக உள்ளது. மேலும், “உச்ச நீதிமன்றத்திற்கு முன்பு நிலுவையில் உள்ள எந்த விஷயத்திலும் முழுமையான நீதி வழங்குவதற்குத் தேவையான எந்தத் தீர்ப்பையும்…