
தலையங்கம் – அமிழ்ந்து கிடப்பதெல்லாம் அமைதியல்ல!
தமிழ்நாடு சட்டமன்றத்தில், “இங்கு பேசிய அமைச்சர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது உங்கள் துறையை வளர்த்தெடுத்ததற்கு, உங்களின் திறமை காரணமாக இருந்தாலும் இந்த வளர்ச்சிக்கு அடிப்படையான-முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. அதுதான் மாநிலத்தில் அமைதி! அதற்கு என்னுடைய துறையான காவல்துறைதான் காரணம். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது, அதனால்தான் வெளி மாநிலத்தவர்கள் இங்கு வந்து கொள்ளையடிக்க வருகிறார்கள்” என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் காவல்துறை மானியக் கோரிக்கையின் போது பேசினார். கொள்ளை நடக்கிறது என்றால் அங்கே அமைதி இல்லை…