
தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பு வெப்ப அலை பற்றிய எச்சரிக்கை விடுத்துள்ளது! தொழிலாளர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்திட ஏஐசிசிடியு வேண்டுகோள்!
நாடு முழுவதும் கடும் வெயிலின் தாக்கத்தால் இந்த ஆண்டு வெப்ப அலை வீசும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த பின்னணியில் தொழிலாளரின் உயிர், உடல் நலத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில், பிரதம மந்திரி, ஒன்றிய தொழிலாளர் அமைச்சர்,தேசிய பேரிடர் மேலாண்மை வாரிய தலைவர் ஆகியோருக்கு விவரமான கடிதங்கள் அனுப்பி உள்ளது. உலக பருவநிலை அமைப்பானது இந்தியாவில் இந்த ஆண்டு வெப்பம் தொழில் மயமாக்கத்திற்கு முந்திய காலத்தை விட…