அங்கன்வாடி மையத்திற்கு ஆசிரியர் நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம்

திங்கள் சந்தை, நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட குதிரைப்பந்தி விளையில் அங்கன்வாடி மையத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த மையத்திற்கு கடந்த 2 ஆண்டுகளாக நிரந்தரமாக ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. இதனால் அருகில் உள்ள அங்கன்வாடி ஆசிரியர் அவ்வப்போது வந்து செல்கிறார். எனவே அங்கன்வாடிக்கு நிரந்தரமாக ஆசிரியர் நியமிக்க வேண்டும். அங்கன்வாடி குழந்தைகள் உடல்நலன் கருதி குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இகக(மாலெ) சார்பில் 03.04.25 அன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது….

Read More

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரிடம் இகக(மாலெ) மனு

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் 22 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். தூய்மை பணியாளர்களின் ஒப்பந்ததாரர் பைரவி பவுண்டேசன், 3 ஆண்டுகளாக தொழிலாளர்களிடமிருந்து தினந்தோறும் பிடித்தம் செய்த இபிஎப், இஎஸ்ஐ தொகையில் முறைகேடு செய்துள்ளார். இது குறித்து பொய்யான அறிக்கை சமர்ப்பித்த வில்லுக்குறி செயல் அலுவலர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கவும் வில்லுக்குறி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு முழுமையாக இபிஎப், இஎஸ்ஐ, செலுத்திட உரிய நடவடிக்கை எடுக்கவும் இஎஸ்ஐ, இபிஎப் செலுத்தாத பைரவி பவுண்டேசன்…

Read More

பள்ளி செல்லும் வழியில் சேதமடைந்த பாலத்தை சீரமைக்க அஇமுபெக கோரிக்கை மனு

ராமநாதபுரம், 08.04.2025 திருவாடானை தாலுகா ஓரிக்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி, ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களுக்கு செல்லும் ஒரே பாதையில் சேதமடைந்துள்ள தூம்பு பாலத்தை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி, அஇமுபெக மாவட்ட பொறுப்பாளர் சந்தனமேரி தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரிக்கோட்டை ஊராட்சி மக்கள் மனு அளித்தனர். ஒரிக்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி, அதனை சுற்றி ஊராட்சி அலுவலகம், நுாலகம், பொது கழிப்பிடம் ஆகியவை அமைந்துள்ளது. இவ்விடங்களுக்கு செல்லும் தூம்பு பாலம்…

Read More

திருச்சியில் அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 08.04.2025 அன்று திருச்சியிலுள்ள வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் சந்தாதாரர்கள் மற்றும் 1995ல் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களின் குறைபாடுகளை எளிய முறையில் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்த்து வைக்க வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏஐடியூசி, ஐஎன்டியூசி, எச்எம்எஸ், ஏஐசிசிடியூ, எல்எல்எப், யூடியூசி, தொமுச உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தின் ஞான தேசிகன்…

Read More

கோவையில் வீடற்றோர் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இகக(மாலெ) யின் வீடற்றோர் மக்கள் இயக்கம் சார்பில் 07.04.25 அன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வீடற்ற மக்கள் வழங்கிய மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வீடற்றோர் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொருப்பாளர் தோழர்.கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். கட்சியின் வடவள்ளி பகுதி பொறுப்பாளர் தோழர் சிவா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இகக(மாலெ) மாவட்ட செயலாளர் தோழர் பாலசுப்ரமணியன், மாநிலக்குழு உறுப்பினர் தோழர் பெரோஸ்பாபு ஆகியோர் உரையாற்றினர்….

Read More

மயிலாடுதுறையில் அஇமுபெக மாநில முண்ணனிகள் கூட்டம்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் மாநில முண்ணனிகள் கூட்டம் மயிலாடுதுறையில் 06.04.2025 அன்று நடைபெற்றது. 13 மாவட்டங்களிலிருந்து ஏறத்தாழ 50 பேர் கலந்து கொண்டனர். ரேவதி, பிலோமினா, மாதவி, கார்மல், சரோஜா, மனோன்மணி, தேன்மொழி, சந்தனமேரி, வள்ளிமயில் உள்ளிட்ட தோழர்கள் கூட்டத்தை வழிநடத்தினர். பாசிச மோடி ஆட்சியை எதிர்த்துப்போராட வேண்டியது பெண்கள் கழகத்தின் முதன்மையான கடமை. அந்தக் கடமையை வெளிப்படுத்தும் வகையில் மார்ச் 8 தஞ்சைப் பேரணி இருந்ததென தனது துவக்க உரையில் மாநில அமைப்பாளர்…

Read More

மயிலாடுதுறையில் இகக(மாலெ), அஇமுபெக ஆர்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டியும் நீட் விலக்கு தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும் மயிலாடுதுறையில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகமும் இகக(மாலெ) கட்சியும் இணைந்து 06.04.25 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் என். குணசேகரன் தலைமை வகித்தார். அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாவட்ட அமைப்பாளர் கே. மாதவி முன்னிலை வகித்தார். இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி, மத்திய…

Read More

திபங்கர்பாஜக-வை பாசிச கட்சி என்று இகக(மா) இப்போதும் கருதவில்லை;

தி வயர் பத்திரிகையாளரின் கேள்வி: பாஜக-வை பாசிச கட்சி என்று இகக(மா) இப்போதும் கருதவில்லை; ஆனால் இகக(மாலெ) விடுதலை அதை பாசிச கட்சியாக வகைப்படுத்துகிறதே? திபங்கர்:   உண்மையில், இந்த விவாதத்தை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஏனென்றால், ஒவ்வொரு நாளும், வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் பாசிசத் தாக்குதலை நேரடியாக அனுபவித்துக் கொண்டிருக்கிற இந்த 2025-ல், இந்த விவாதம் எதற்கு? ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம், தலித்துகள், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் முதல் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் வரை…

Read More

இன்றைய இந்தியாவில் பகத்சிங்கின் எதிரொலி

பகத்சிங்கும் அவரது தோழர்கள் சுகதேவ், ராஜகுரு ஆகியோரும் தூக்கிலிடப்படுவதற்காக குறிக்கப்பட்டிருந்த நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்டு 94 ஆண்டுகள் கடந்துவிட்டன. அன்றிலிருந்து அவர் “ஷஹீத்-ஏ-ஆஸம்” (மாபெரும் தியாகி அல்லது தியாகிகளின் தியாகி) என்ற உருது அடைமொழியால் நினைவில் கொள்ளப்படுகிறார். பகத்சிங் மூலம் அமரத்துவம் பெற்ற “இன்குலாப் ஜிந்தாபாத்” (புரட்சி வாழ்க) என்ற உருது மொழியின் முழக்கம், மாற்றம் மற்றும் நீதிக்கான கூட்டுறுதியின் மிகவும் புகழ்பெற்ற முழக்கமாக இந்தியா முழுவதும் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. 90…

Read More