
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல்: கேள்விகளுக்கு மோடி அரசாங்கம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்
பஹல்காமில் நடந்த மிகக்கொடூரமான தீவிரவாதத் தாக்குதல், மீண்டும் ஒருமுறை பயங்கரவாதத்தின் மிருகத்தனத்தை நம்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் நேபாளத்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப்பயணியும் பஹல்காமைச் சேர்ந்த ஒரு குதிரை வண்டி ஓட்டுநரும் அடங்குவர். இந்த நிகழ்வு உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கோரமான குற்றத்தை இழைத்த தீவிரவாதிகள் கண்டிப்பாக நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப கொலை செய்யவும் இரத்தத்தை உறைய வைக்கும் இத் தாக்குதலை திட்டமிட்டு நடத்தி…