உலக அரசியல்


காஸாவுக்கு சென்று கொண்டிருந்த மனிதாபிமான கப்பல் மட்லீனை இஸ்ரேல் தாக்கியது !
காஸாவுக்கு சென்று கொண்டிருந்த ஃப்ரீடம் ஃப்ளோடில்லா கூட்டமைப்பின் ஒரு பகுதியான, மனிதாபிமான உதவிக் கப்பல் மட்லீனை, சர்வதேச கடல் எல்லைக்குள் இஸ்ரேலிய படைகள் வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தின. உலகெங்கிலும் இருந்து வந்த 12 ஆயுதமற்ற தன்னார்வலர்கள் இந்தக் கப்பலில் இருந்தனர். இவர்களில் பருவநிலை செயல்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க்கும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான பிரெஞ்சு நாட்டின் ரிமா ஹசனும் இருந்தனர். காஸா மக்களுக்கு அவசரத் தேவையான உணவு, மருத்துவப் பொருட்கள், நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் இந்தக் கப்பலில் இருந்தன. …
