admin

மக்கள் விரோத மோடி ஆட்சிக்கு எதிரான, ஜூலை 09 நாடுதழுவிய பொது வேலைநிறுத்தம், நகர்ப்புற – கிராமப்புற முழு அடைப்பாக அமையட்டும்!

ஒன்றிய பாசிச மோடி ஆட்சிக்கு எதிராக அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் ஜூலை 09ம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. நான்கு தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்களும் சுதந்திரமான தொழிற்சங்க கூட்டமைப்புகளும் அறிவித்துள்ள அகில இந்திய வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதென்றும்,  இதன் ஒரு பகுதியாக, விவசாய -கிராமப்புறத் தொழிலாளர்கள், ஏழை மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளுக்காகவும், கார்ப்பரேட் சூறையாடலில் இருந்து வேளாண்மை – விவசாயிகளின் நிலம்…

Read More

“காந்தியைக் கொன்றவர்கள் : இந்தியாவின் ஆட்சியாளர்கள்”

ஆர்எஸ்எஸ் – பாஜகவில் எனது அனுபவங்கள்” என்ற டாக்டர் பார்த்தா பானர்ஜி எழுதிய புத்தகத்தை வெளியிட்டு, இகக (மாலெ) பொதுச் செயலாளர் திபங்கர் பேசிய உரையின் சுருக்கம்) அன்புள்ள தோழர்களே! நண்பர்களே! காந்தியின் கொலையாளிகள் இன்றைய ஆட்சியாளர்கள் என்ற இந்த புத்தகத்தை தமிழில் மொழியாக்கம் செய்து கொண்டு வரும் உங்களது முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. ஏனென்றால், மக்கள் ஆர்எஸ்எஸ் பற்றி நன்றாக அறிந்து கொள்வது முற்றிலும் அவசியம். இன்று இந்தியாவில் அரசியல் அதிகாரம், பொருளாதார ஆதிக்கம், சமூக…

Read More

தலையங்கம் – அமிழ்ந்து கிடப்பதெல்லாம் அமைதியல்ல!

தமிழ்நாடு சட்டமன்றத்தில், “இங்கு பேசிய அமைச்சர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது  உங்கள் துறையை வளர்த்தெடுத்ததற்கு, உங்களின் திறமை காரணமாக இருந்தாலும் இந்த வளர்ச்சிக்கு அடிப்படையான-முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. அதுதான் மாநிலத்தில் அமைதி! அதற்கு என்னுடைய துறையான காவல்துறைதான் காரணம். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது, அதனால்தான் வெளி மாநிலத்தவர்கள் இங்கு வந்து கொள்ளையடிக்க வருகிறார்கள்” என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் காவல்துறை மானியக் கோரிக்கையின் போது பேசினார். கொள்ளை நடக்கிறது என்றால் அங்கே அமைதி இல்லை…

Read More

நீதிதுறைக்கு எதிரான பாஜகவின் தீய எதிர்ப்பியக்கத்தை முறியடிப்போம்

அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக மோடி அரசாங்கம் தொடர்ந்து நடத்துகிற போர், இப்போது, அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலரான இந்திய உச்ச நீதிமன்றத்துடன் மோதலுக்கு இட்டுச் சென்றுள்ளது. குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உச்ச நீதிமன்றம் “ஒரு சூப்பர் நாடாளுமன்றம்” போல செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, மூர்க்கத்தனமாக இழிவுபடுத்துவதன் வெளிப்பாடாக உள்ளது. மேலும், “உச்ச நீதிமன்றத்திற்கு முன்பு நிலுவையில் உள்ள எந்த விஷயத்திலும் முழுமையான நீதி வழங்குவதற்குத் தேவையான எந்தத் தீர்ப்பையும்…

Read More

பவானியில் திருவிழாக் கால வியாபாரிகள் சங்கத் துவக்க நிகழ்வு

ஈரோடு மாவட்டம் பவானியில் 2025 மே 1 அன்று  ஏஐசிசிடியுவுடன் இணைந்த தமிழ்நாடு ஜனநாயக பொதுத் தொழிலாளர் சங்கத்தின்  திருவிழாக் கால வியாபாரிகள் சங்க பிரிவு  துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ஏஐசிசிடியு ஈரோடு மாவட்டச் செயலாளர் ஜே.பி.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஏஐசிசிடியு கொடியை மூத்த தோழர் முத்து ஏற்றினார். கே. அமுதா மற்றும் கலைவாணி முன்னிலை வகித்தனர். ஜி.பிரியா வரவேற்றுப் பேசினார். ஏஐசிசிடியு மாநில துணைத் தலைவர் ஜி.ரமேஷ் சிறப்புரையாற்றினார். அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின்…

Read More

சித்திரச் சோலைகளே

உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே… உங்கள் வேரினிலே… தாமரை பூத்த தடாகங்களே உமை தந்த அக்காலத்திலே தாமரை பூத்த தடாகங்களே உமை தந்த அக்காலத்திலே எங்கள் தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச் சொல்லவோ ஞாலத்திலே சொல்லவோ ஞாலத்திலே சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள்…

Read More

வேண்டும் ஆணவக் கொலைகள் தடுப்புச்சட்டம்; வேண்டும் பெரியார் சமத்துவபுரம்!

ரமேஷ் கணபதி கண்ணகி-முருகேன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையை 28.04.2025 அன்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. விருத்தாசலம் மாவட்டம் புதுக் கூரைப் பேட்டையைச் சேர்ந்த வன்னிய சமூக கண்ணகியும் தலித் சமூக முருகேசனும் காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். அதனால், கண்ணகியின் தந்தை துரைசாமியும் அவரது மகன் மருதுபாண்டியும் இருவரின் காதுகளில் விஷத்தை ஊற்றிக் கொன்று எரித்துவிட்டார்கள். பின்னர், காவல்துறை துணையுடன் முருகேசனின் தந்தை சாமிக்கண்ணுவையும் குற்றவாளியாக்கினார்கள. இச் சம்பவம் நடந்தது…

Read More

தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பு வெப்ப அலை பற்றிய எச்சரிக்கை விடுத்துள்ளது!  தொழிலாளர்களை     பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்திட ஏஐசிசிடியு வேண்டுகோள்!

நாடு முழுவதும் கடும் வெயிலின் தாக்கத்தால் இந்த ஆண்டு வெப்ப அலை வீசும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த பின்னணியில் தொழிலாளரின் உயிர், உடல் நலத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில், பிரதம மந்திரி, ஒன்றிய தொழிலாளர் அமைச்சர்,தேசிய பேரிடர் மேலாண்மை வாரிய தலைவர் ஆகியோருக்கு விவரமான கடிதங்கள் அனுப்பி உள்ளது. உலக பருவநிலை அமைப்பானது இந்தியாவில் இந்த ஆண்டு வெப்பம் தொழில் மயமாக்கத்திற்கு முந்திய காலத்தை விட…

Read More

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல்: கேள்விகளுக்கு மோடி அரசாங்கம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்

பஹல்காமில் நடந்த மிகக்கொடூரமான தீவிரவாதத் தாக்குதல், மீண்டும் ஒருமுறை பயங்கரவாதத்தின் மிருகத்தனத்தை நம்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் நேபாளத்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப்பயணியும் பஹல்காமைச் சேர்ந்த ஒரு குதிரை வண்டி ஓட்டுநரும் அடங்குவர். இந்த நிகழ்வு உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கோரமான குற்றத்தை இழைத்த தீவிரவாதிகள் கண்டிப்பாக நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப கொலை செய்யவும்  இரத்தத்தை உறைய வைக்கும் இத் தாக்குதலை திட்டமிட்டு நடத்தி…

Read More

“ஜெஎன்யூ இன்னும் சிவப்பாகவே உள்ளது”

மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தேர்தல் முடிவுகள் ஏப்ரல் 28 அன்று வெளிவந்துள்ளன. “துளைத்தெடுக்கும் தேர்தல் போட்டியை”க் கண்ட மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி மாணவர் அமைப்பு பெரும்பான்மை பெற்று வென்றுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸால் “பீகாரிலிருந்து மற்றுமொரு நிதிஷ் குமார் என்று குறிப்பிடப்படும் அய்சா மாணவர் தலைவர் நிதிஷ் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். சென்றமுறை தலித் சமூகப் பின்னணி கொண்ட தனஞ்ஜெய்யைத் தொடர்ந்து இம்முறை மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச்…

Read More