புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், தீத்தானிப்பட்டியில் ஆதிதிராவிட நலத்துறையால் ஒதுக்கப்பட்ட ஆதிதிராவிட மக்களுக்கான இலவச வீட்டுமனை பட்டா வழங்க தாமதிக்கும் ஆதிதிராவிட நலத்துறையை கண்டிக்கும் விதமாக 06.04.2025 அன்று தீத்தானிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தோழர் முத்துராஜா தலைமையில் நடைபெற்றது. இகக(மாலெ) புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் தோழர் வளத்தான் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசினார்.
கறம்பக்குடி ஒன்றியச் செயலாளர் தோழர் ரெங்கசாமி, புதுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் தோழர் சின்னத்துரை, கறம்பக்குடி நகரச் செயலாளர் தோழர் தர்மராஜ், கறம்பக்குடி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தோழர் ரெங்கசாமி, தோழர் வரதராஜன், தோழர் சுப்பிரமணியன், தோழர் சிவரஞ்சனி, தோழர் சிவா, தோழர் கருப்பையா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊர் பொது மக்களுக்கு 92 பட்டாவையும் 30.04.25 க்குள் கொடுத்துவிடுவதாக அறந்தாங்கி ஆதிதிராவிட நலத் துறை அதிகாரி உறுதி கூறியதன் பேரில் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.