இன்றைய இந்தியாவில் பகத்சிங்கின் எதிரொலி

பகத்சிங்கும் அவரது தோழர்கள் சுகதேவ், ராஜகுரு ஆகியோரும் தூக்கிலிடப்படுவதற்காக குறிக்கப்பட்டிருந்த நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்டு 94 ஆண்டுகள் கடந்துவிட்டன. அன்றிலிருந்து அவர் “ஷஹீத்-ஏ-ஆஸம்” (மாபெரும் தியாகி அல்லது தியாகிகளின் தியாகி) என்ற உருது அடைமொழியால் நினைவில் கொள்ளப்படுகிறார். பகத்சிங் மூலம் அமரத்துவம் பெற்ற “இன்குலாப் ஜிந்தாபாத்” (புரட்சி வாழ்க) என்ற உருது மொழியின் முழக்கம், மாற்றம் மற்றும் நீதிக்கான கூட்டுறுதியின் மிகவும் புகழ்பெற்ற முழக்கமாக இந்தியா முழுவதும் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. 90 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று, இந்தியாவிலேயே மிகவும் அதிக மக்கள்தொகை கொண்ட ஒரு மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் பாரதிய ஜனதா கட்சி முதல்வர், உருது மொழியை “மதவெறியின் மொழி” என்று அவமதிக்கும் போது, பகத்சிங் எவ்வளவு சமகாலத்தவராகவும், எவ்வளவு பொருத்தமானவராகவும் இருக்கிறார் என்பதை நாம் எளிதாக உணர முடியும்.

பகத்சிங் இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார். அதேநேரத்தில் அவர் காலனிய இந்தியாவின் மிகவும் அறிவு முதிர்ச்சி கொண்டவராகவும், தொலைநோக்குப் பார்வை கொண்டவராகவும் இருந்தார். அவரும் அவரது தோழர்களும் தங்கள் மகத்தான தியாகத்தை மேற்கொண்டதற்கு, ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா விடுதலை பெற வேண்டும் என்ற உணர்வெழுச்சி மிகுந்த வேட்கை மட்டுமே காரணமல்ல, ஒரு சோசலிச இந்தியா பற்றிய கனவும் அதற்கு காரணமாக இருந்தது. இந்தியாவின் விடுதலை இயக்கம் தேசத்திற்கு விழிப்புணர்வூட்டுவதாக இருந்தது. அது இந்தியாவை காலனியாதிக்க ஆட்சியின் விலங்குகளிலிருந்து விடுவிப்பதற்காக பல லட்சக்கணக்கான இந்தியர்களை ஒன்றிணைத்தது மட்டுமல்லாமல், அந்த தேசிய எழுச்சியின் போது நவீன இந்தியா பற்றிய பார்வையையும் வடிவமைத்தது. இந்த இரண்டு அம்சங்களிலும் பகத்சிங் ஒரு சிறந்த விடுதலைப் போராட்ட வீரராக இருந்தார். பாபாசாகேப் அம்பேத்கரின் தலைமையில் விரிவான நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை அனைவருக்கும் வழங்குகிற, ஒரு இறையாண்மைமிக்க சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக இந்தியாவை பிரகடனப்படுத்துகிற இந்திய அரசமைப்பு சட்டத்திற்கான அரசியல் எதிர்காலப் பார்வையை, கருத்தியல் உறுதிப்பாட்டை பகத்சிங்கும் அவரது தோழர்களும் வடிவமைத்தனர்.

இன்று டிரம்ப் நிர்வாகம் இந்தியாவை ஒவ்வொரு வகையிலும் அவமானப்படுத்துகிறது, தீங்கிழைக்கிறது; அத்தகைய அமெரிக்க நடவடிக்கைகளை மோடி அரசாங்கம் நியாயப்படுத்துகிறது. இப்போது பகத்சிங்கை நினைவில் கொள்ளுங்கள். முடிவேயற்ற இனப்படுகொலைகளால் பாலஸ்தீன குழந்தைகளையும் அவர்களது பெற்றோர்களையும் நெதன்யாகு கொன்று குவிக்கிறார்; சுதந்திரம், நீதி, அமைதியின் ஒவ்வொரு குரலையும் டிரம்ப் துன்புறுத்துகிறார்; இவற்றைப் பார்த்துக் கொண்டு மோடி அரசாங்கம் மௌனமாக இருப்பது மட்டுமல்லாமல், இந்த இனப்படுகொலை நடவடிக்கைகளுக்கு அனைத்து வகையிலும் ஆதரவு அளிக்கிறது, இப்போது பகத்சிங்கை நினைவில் கொள்ளுங்கள். அதானி இந்தியாவின் இயற்கை வளங்களையும் ஒவ்வொரு துறையிலுமுள்ள உள்கட்டமைப்பு வசதிகளையும் தன்வசப்படுத்துகிறார். அவரது ஊழல் முறைகேடுகளுக்காகவும் குற்றச் செயல்களுக்காகவும் சர்வதேச அளவில் அம்பலப்படுத்தப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மோடி இதனை ‘தனிப்பட்ட விஷயம்’ என்று ஒதுக்கித் தள்ளுகிறார். இப்போதும் பகத்சிங்கை நினைவில் கொள்ளுங்கள். இந்தியா உண்மையிலேயே சுதந்திரம் பெற்ற தருணமாக அயோத்தியின் ராமர் கோவிலை மோகன் பகவத் விவரிக்கும்போது, பகத்சிங்கை நினைவில் கொள்ளுங்கள். 

பகத்சிங்கும் அவரது தோழர்களும் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இந்தியாவின் விடுதலை இயக்கத்திற்கு கொண்டு வந்த துணிவு, உறுதி, கருத்தியல் தெளிவு ஆகியவை இந்திய மக்களாகிய நமக்கு ஒரு நிரந்தர சொத்தாகும். இது 1947 இல் நாம் விடுதலை பெறுவதற்கு உதவியது. இது ஏகாதிபத்திய மேலாதிக்கம், பாசிச மூர்க்கத்தனம், கார்ப்பரேட் கொள்ளை, மதவாத வெறுப்பு ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்கான நமது தற்போதைய போராட்டத்தில் நமக்கு மாபெரும் ஆற்றலை வழங்கும்.

புரட்சி வாழ்க! ஏகாதிபத்தியம் ஒழிக!

ஆங்கில எம் எல் அப்டேட் தலையங்கம் தமிழில்