
பாசிச மோடி ஆட்சிக்கு முடிவுகட்ட ஒன்றுபடுவோம் – போராடுவோம் – வெற்றி பெறுவோம்! ஏஐசிசிடியு (AICCTU) வுடன் எல்டியுசி (LTUC) இணைந்தது
சென்னை அம்பத்தூரில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மே நாள் பொதுக்கூட்டத்திற்கு உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் பாரதி தலைமை வகித்தார். எல்டியுசி மாநிலத் தலைவர் தோழர் ஏ.எஸ். குமார் முன்னிலை வகித்தார். அவர் கூட்ட நிகழ்வுகளை ஒருங்கிணைத்ததுடன் தோழர் ஜீவாவின் காலுக்க செருப்புமில்லை பாடலை நெகிழ்ச்சியுடன் பாடினார். இடது தொழிற்சங்க மய்யம் (LTUC) அகில இந்திய தொழிற்சங்க மய்யக் கவுன்சிலில் (AICCTU) மே 1, 2025 அன்று இணைந்தது. அது தொடர்பான இணைப்பு பிரகடனத்தை …