ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இகக (மாலெ) கண்டனம்!
ஈரானுக்கு எதிராக இஸ்ரேலிய அரசு அண்மையில் நடத்திய இராணுவ தாக்குதலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன் வன்மையாகக் கண்டிக்கிறது. ஜூன் 13ம் தேதி, ஈரான் மக்கள் பயன்பாட்டுக்கான அணுசக்தி கட்டமைப்புகள் பிற உள்கட்டமைப்பு வசதிகள் மீதும் இஸ்ரேல் பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. மோதலை அதிகரிக்கும் இந்த பொறுப்பற்ற நடவடிக்கை, இந்த பிராந்தியத்தில் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை திணிக்க, மேற்கு ஆசியாவை சீர்குலைக்க, பரவலான மோதலைத் தூண்டிவிட அமெரிக்க-இஸ்ரேல் அச்சு மேற்கொள்ளும் திட்டமிட்ட உத்தியின் ஒரு பகுதியாகும். காஸா…