*மக்கள்_அதிகாரம்_மாநாட்டில்_திபங்கர்_சிறப்புரை !*சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில், இன்று 17.5.25 மாலை மக்கள் அதிகாரம் தமிழ்நாடு – புதுவை அமைப்பு , “ஒன்றிய அதிகாரக் குவிப்பை தடுத்திடு – மாநில தன்னாட்சிக்கு போரிடு!” என்ற கருத்தரங்கு நடத்தியது. மாலை 6.30 மணியளவில் துவங்கிய அரசியல் மாநாட்டிற்கு மக்கள் அதிகாரம் மாநில பொது செயலாளர் தோழர். திருச்சி செழியன் தலைமை தாங்கினார். Cpi-Ml Tamilnadu தலைமை தோழர்கள் கலந்து கொண்டனர். இடதுசாரி கட்சிகள் மற்றும் சனநாயக ஆளுமைகள் உரையாற்றினார்கள். சிபிஐ எம்எல் கட்சியின் பொதுசெயலாளர் தோழர். திபங்கர் உரையாற்றினார். ( உரையை தோழர். ஞானதேசிகன் Desikan Kallapiran மொழியாக்கம் செய்தார்.)
மாநாட்டில் விசிக நிறுவன தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொது செயலாளர் கே.சாமுவேல்ராஜ், திராவிடர் கழகம் துணை பொது செயலாளர் பிரின்ஸ் என்னாரசு பெரியார், மக்கள் அதிகாரம் தலைமை குழு உறுப்பினர் சி.ராஜூ உள்ளிட்ட இடதுசாரி கட்சி தலைவர்கள் மற்றும் சனநாயக ஆளுமைகள் உரையாற்றினார்கள்.
தோழர். திபங்கர் உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :-
” இன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது, அதன் முகப்புரையில் வலியுறுத்தப்பட்ட அடிப்படைகளான ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ ஆகியவற்றின் மீது தாக்குதல், போர் தொடுக்கப்படுகிறது. மாநில சுயாட்சி உரிமைகள் மீது நாம் குரல் எழுப்பிக் கொண்டு இருக்கிறோம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பது ‘இந்திய மக்களாகிய நாம்’ என்று சொல்கிறதுமாநில உரிமைகள் என்று நாம் சொல்லும்போது, அது ‘மக்கள் உரிமைகள்’ என்பது தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் #மக்கள்_அதிகாரம் அமைப்பு இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. அம்பேத்கர் முதலில் முன்வைத்த அரசியலமைப்புச் சட்ட அறிக்கையில் முதலில் United states of India என்றார். தலித்துகளை சிறுபான்மையர் என்றார். பிறகு நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சி / Fedaralism என்பது அப்பட்டமாக இருக்கவில்லை தான் ! அது இலட்சியப் பூர்வமான அரசியலமைப்புச் சட்டத்திற்கு குறைவானது தான்! ஆனாலும் கூட, அந்தமுகப்புரை இந்தியாவை ஒரு இறையாண்மை, சோசலிச, சமயச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு என்று கூறுவது, அன்றைய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தின் விருப்பத்தை பிரதிபலிக்கும் கொள்கை அறிக்கை ஆகும். இன்றைய பாசிச அபாய சூழலில் அரசியலமைப்புச் சட்டத்தின் அம்சங்களை பாதுகாக்க வேண்டியுள்ளது.
ஒன்றிய பாஜக அரசால் கூட்டாட்சி மீது மிகப்பெரிய தாக்குதல் தொடுக்கப்படுகிறது. சிறப்பு பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது; மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் துணை மாநிலங்களாக union territory ஆக்கப் பட்டது. தமிழ்நாட்டின் மொழி மீது, உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது. தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு அரசு முன்வைத்த மசோதாக்கள் கையெழுத்திடாமல் கொல்கிறார். இத்தகைய செயல்பாடு மீது அரசியலமைப்புச் சட்ட விரோதம் / unconstitutional என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்த பிறகும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை. ஆளுநராக தொடர்கிறார். மாறாக, துணை ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவிக்கிறார். தற்போது ஜனாதிபதியும் கூட, உச்சநீதிமன்றத்தின் அதிகாரம் பற்றிய கேள்விகளை கேட்கிறார். கூட்டாட்சி தத்துவம் தற்போது கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. கூட்டாட்சி, சனநாயகம் என பல்வேறு அம்சங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது.தொகுப்பாக பார்த்தால், அனைத்தும் அரசியலமைப்புச் சட்டம் மீதான தாக்குதலாக இருக்கிறது.
100 ஆண்டு கால வரலாறு உடைய ஆர்எஸ்எஸ் பின்னணி வரலாறு தெரிய வேண்டும். 1949 ல் அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, ஆர்’எஸ்’எஸ் மனுஸ்மிருதி வேண்டும் என்றது. கோல்வால்கர் எழுதிய Bunch of thoughts அகண்ட இந்து பேரரசு பற்றி பேசியது; கூட்டாட்சி தத்துவத்தை நிராகரித்தது. எனவே தான், அவர்கள் மோடியை கூட பேரரசர் ஆக சித்தரிக்கிறார்கள். அன்றே அம்பேத்கர் எச்சரிக்கை செய்தார். 1949 ல் சொன்னார், ‘நல்லதொரு அரசியலமைப்புச் சட்டம் தவறான ஆட்கள் கையில் கிடைத்தால் .. சனநாயகம் பறிபோகும்.’ என்றார்.மேலும், ஆர்’எஸ்’எஸ் பற்றி அம்பேத்கர் சொன்னார் : ” ஒருவேளை ‘இந்து ராஜ்யம்” என்பது உண்மையாகும் எனில், அது இந்நாட்டுக்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும்’ என்றார்.அரசியலமைப்புச் சட்டம் நூற்றாண்டு காலப் போராட்டத்தின் பாரம்பரியத்தின் விளைவு ஆகும். பாசிசம் தற்போது இதை அழிக்கப் பார்க்கிறது.மோடி அரசு, இந்தியாவை கார்ப்பரேட்களின் கொள்ளைக் காடாக மாற்றுகிறது; அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் சரணடைகிறது. ‘பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நாளாக’ , மோகன் பாகவத் கூறுகிறார். இந்தியா மிகச்சிறந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு சுதந்திரப் போராட்ட வரலாற்றை, மரபை கொண்டுள்ளது என்பதை நாம் அறிவோம்!
¶ இன்றைய அரசியல் சூழ்நிலையில், கூட்டாட்சி உரிமைகள் துவங்கி, விவசாயிகள், தொழிலாளர்கள் அனைத்து பிரிவு மக்கள் உரிமைகள் வரை, அனைத்தும் தழுவிய விரிந்த போராட்ட ஒற்றுமையை நாம் கட்டமைக்க வேண்டும் !
¶ தமிழ்நாடு மிகச்சிறந்த வர்க்க, சாதிய எதிர்ப்பு, மக்கள் போராட்ட மரபுகளை கொண்டுள்ளது. பாசிசத்துக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழ்நாடு முன் நிற்க வேண்டும்!
¶ வலுவான சனநாயகம், வலுவான கூட்டாட்சியை கட்டமைக்க நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்!
¶ ஜூலை 9 பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் !
¶ பாசிசம் ஒழிக ! புரட்சி ஓங்குக! “