ஈரோடு மாவட்டம் பவானியில் 2025 மே 1 அன்று ஏஐசிசிடியுவுடன் இணைந்த தமிழ்நாடு ஜனநாயக பொதுத் தொழிலாளர் சங்கத்தின் திருவிழாக் கால வியாபாரிகள் சங்க பிரிவு துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ஏஐசிசிடியு ஈரோடு மாவட்டச் செயலாளர் ஜே.பி.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஏஐசிசிடியு கொடியை மூத்த தோழர் முத்து ஏற்றினார். கே. அமுதா மற்றும் கலைவாணி முன்னிலை வகித்தனர். ஜி.பிரியா வரவேற்றுப் பேசினார்.
ஏஐசிசிடியு மாநில துணைத் தலைவர் ஜி.ரமேஷ் சிறப்புரையாற்றினார். அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் தேன்மொழி, ஏஐசிசிடியு மாநிலச் செயலாளர் முத்துகிருஷ்ணன், நாமக்கல் மாவட்டச் செயலாளர் என்.வெங்கடேஷ், பேச்சியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவிழாக் கால வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைச் சுரண்டும் டெண்டர் முறை ஒழிக்கப்பட வேண்டும், அந்த வியாபாரிகளுக்கு அரசு உரிமமும் அடையாள அட்டையும் வழங்கி பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முற்றுகைப்போராட்டம்
தமிழ்நாடு சனநாயக பொது தொழிலாளர் சங்கம், தூய்மை பணி பிரிவு ஓட்டுனர் பிரிவு ( AICCTU) கோவை, தூய்மை பணியாளர் நலச் சங்கம், தமிழ்புலிகள் தூய்மை பணியாளர்கள் சங்கங்கள் அங்கம் வகிக்கும் அதிகார குரல் கூட்டமைப்பு சார்பாக மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிநிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு 30.04.2025 அன்று போராட்டம் நடத்தினர்.
தோழர்கள் பாலசுப்பிரமணியன் சந்தனக்குமார், வள்ளி, ரங்கநாதன், சுரேஷ், தமிழரசன், சாமுவேல், மகேஷ், கார்த்திக், பிலோமினா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.