
பள்ளி செல்லும் வழியில் சேதமடைந்த பாலத்தை சீரமைக்க அஇமுபெக கோரிக்கை மனு
ராமநாதபுரம், 08.04.2025 திருவாடானை தாலுகா ஓரிக்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி, ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களுக்கு செல்லும் ஒரே பாதையில் சேதமடைந்துள்ள தூம்பு பாலத்தை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி, அஇமுபெக மாவட்ட பொறுப்பாளர் சந்தனமேரி தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரிக்கோட்டை ஊராட்சி மக்கள் மனு அளித்தனர். ஒரிக்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி, அதனை சுற்றி ஊராட்சி அலுவலகம், நுாலகம், பொது கழிப்பிடம் ஆகியவை அமைந்துள்ளது. இவ்விடங்களுக்கு செல்லும் தூம்பு பாலம்…