நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரிடம் இகக(மாலெ) மனு

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் 22 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். தூய்மை பணியாளர்களின் ஒப்பந்ததாரர் பைரவி பவுண்டேசன், 3 ஆண்டுகளாக தொழிலாளர்களிடமிருந்து தினந்தோறும் பிடித்தம் செய்த இபிஎப், இஎஸ்ஐ தொகையில் முறைகேடு செய்துள்ளார்.

இது குறித்து பொய்யான அறிக்கை சமர்ப்பித்த வில்லுக்குறி செயல் அலுவலர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கவும் வில்லுக்குறி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு முழுமையாக இபிஎப், இஎஸ்ஐ, செலுத்திட உரிய நடவடிக்கை எடுக்கவும் இஎஸ்ஐ, இபிஎப் செலுத்தாத பைரவி பவுண்டேசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரிடம் 06.04.25 அன்று இகக(மாலெ) மனு அளித்துள்ளது.