இகக(மாலெ) யின் வீடற்றோர் மக்கள் இயக்கம் சார்பில் 07.04.25 அன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வீடற்ற மக்கள் வழங்கிய மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வீடற்றோர் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொருப்பாளர் தோழர்.கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். கட்சியின் வடவள்ளி பகுதி பொறுப்பாளர் தோழர் சிவா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இகக(மாலெ) மாவட்ட செயலாளர் தோழர் பாலசுப்ரமணியன், மாநிலக்குழு உறுப்பினர் தோழர் பெரோஸ்பாபு ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட குழு உறுப்பினர் தோழர் சந்தனக்குமார், நவாஸ், ஜான் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீடற்ற மக்கள் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் உள்ள வீடற்ற ஏழை குடும்பங்களுக்கு விலையில்லா வீடு வழங்கவேண்டும். பெரும்பான்மையான மக்கள் நகரத்துக்குள் கூலிவேலை செய்து வருவதால் மாநகர எல்லைக்குள் வீடு வழங்கவேண்டும். பள்ளிக்கூடம், பேருந்து வசதி செய்துதர வேண்டும். ஒன்றிய பாஜக – தேஜகூ அரசாங்கம் அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா – அர்பன் 2.0 திட்டப்படி 3,60,000 கோடியில் 3 கோடி வீடுகள் கட்டி, வீடில்லாத ஏழைகளுக்கு வழங்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். அதன்படி தமிழகத்துக்கு 20 லட்சம் வீடுகள் கட்டி வழங்கிடவேண்டும் போன்ற கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இறுதியில் புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர் தோழர் விவேக் நன்றியுரை வழங்கினார்.இகக(மாலெ) யின் வீடற்றோர் மக்கள் இயக்கம் சார்பில் 07.04.25 அன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வீடற்ற மக்கள் வழங்கிய மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வீடற்றோர் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொருப்பாளர் தோழர்.கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். கட்சியின் வடவள்ளி பகுதி பொறுப்பாளர் தோழர் சிவா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இகக(மாலெ) மாவட்ட செயலாளர் தோழர் பாலசுப்ரமணியன், மாநிலக்குழு உறுப்பினர் தோழர் பெரோஸ்பாபு ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட குழு உறுப்பினர் தோழர் சந்தனக்குமார், நவாஸ், ஜான் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீடற்ற மக்கள் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் உள்ள வீடற்ற ஏழை குடும்பங்களுக்கு விலையில்லா வீடு வழங்கவேண்டும். பெரும்பான்மையான மக்கள் நகரத்துக்குள் கூலிவேலை செய்து வருவதால் மாநகர எல்லைக்குள் வீடு வழங்கவேண்டும். பள்ளிக்கூடம், பேருந்து வசதி செய்துதர வேண்டும். ஒன்றிய பாஜக – தேஜகூ அரசாங்கம் அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா – அர்பன் 2.0 திட்டப்படி 3,60,000 கோடியில் 3 கோடி வீடுகள் கட்டி, வீடில்லாத ஏழைகளுக்கு வழங்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். அதன்படி தமிழகத்துக்கு 20 லட்சம் வீடுகள் கட்டி வழங்கிடவேண்டும் போன்ற கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இறுதியில் புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர் தோழர் விவேக் நன்றியுரை வழங்கினார்.