விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் உதயமார்த்தாண்டபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின் ஊழல் மற்றும் முறைகேடாக கடன் வழங்கியதற்கு பொதுவிசாரனை கோரி விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் அயர்லா பொதுச் செயலாளர் தோழர் என் குணசேகரன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். கூட்டத்தில் இகக(மாலெ) முத்துபேட்டை ஒன்றிய செயலாளர், காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாவட்ட பொறுப்பாளர் தாஹீர் ஆகியோர் உரையாற்றினர். 01.04.25 அன்று நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 100க்கும் மேலானவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.