வக்பு வாரிய திருத்த சட்டத்தைக் கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

வக்பு வாரிய திருத்த சட்டத்தைக் திரும்பப் பெறக் கோரி தூத்துக்குடியில் 09.04.25 அன்று இகக(மாலெ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் மின்னல் அம்ஜத் தலைமை வகித்தார். தோழர்கள் சேர்மன், மலைச்சாமி, வேல்முருகன், ராமர் முன்னிலை வகித்தனர். தூய்மை பணியாளர் சங்கத்தின் தோழர் பொன்ராஜ், ஏஐகேஎம்-இன் தோழர் எஸ் சண்முக பெருமாள், அயர்லாவின் எஸ் விக்ரம் வேலு, ஏஅய்சிசிடியு மாவட்ட செயலாளர் தோழர் சிவராமன், இகக(மாலெ) மாவட்ட பொறுப்பாளர் தோழர் முருகன், இகக(மாலெ) மாநில குழு உறுப்பினர் தோழர் டி சகாயம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநில நிலைக்குழு உறுப்பினர் தோழர் டி சங்கர பாண்டியன் சிறப்புரை ஆற்றினார். தோழர் சுகுமார் நன்றியுரை வழங்கினார். தோழமை அமைப்புகள் உட்பட 45 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.