வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டியும் நீட் விலக்கு தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும் மயிலாடுதுறையில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகமும் இகக(மாலெ) கட்சியும் இணைந்து 06.04.25 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் என். குணசேகரன் தலைமை வகித்தார். அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாவட்ட அமைப்பாளர் கே. மாதவி முன்னிலை வகித்தார். இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி, மத்திய கமிட்டி உறுப்பினர் பாலசுந்தரம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசாங்கம் வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், நீட் விலக்கு தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.