அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 08.04.2025 அன்று திருச்சியிலுள்ள வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் சந்தாதாரர்கள் மற்றும் 1995ல் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களின் குறைபாடுகளை எளிய முறையில் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்த்து வைக்க வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏஐடியூசி, ஐஎன்டியூசி, எச்எம்எஸ், ஏஐசிசிடியூ, எல்எல்எப், யூடியூசி, தொமுச உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தின் ஞான தேசிகன் உள்ளிட்ட பல தலைவர்கள் உரையாற்றினர். இதில் அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.