விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா முகையூர் ஒன்றியத்தில் உள்ள ஆற்காடு கிராமத்தில் திருத்தி மேட்டுத்தெரு, ஆர் சி பகுதியில் குடிநீர், தெரு மின்விளக்கு, சிமெண்ட் சாலை அமைத்திடவும், கண்டாச்சிபுரம் தாலுகாவில் விண்ணப்பித்த அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை வழங்கக் கோரியும் வலியுறுத்தி 09.04.25 அன்று கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகம் முன்பாக இகக(மாலெ) ஆற்காடு கிளை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இகக(மாலெ) ஆற்காடு கிளை செயலாளர் தோழர் மதலேன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் தோழர் இராஜசங்கர், கள்ளக்குறிச்சி மாவட்ட குழு தோழர்கள்
வல்லபநாதன், ஆறுமுகம், விழுப்புரம் மாவட்ட குழு தோழர்கள் வழக்கறிஞர் திவ்ய.பிராங்க்ளின், ஜெய.சௌந்தர், ஜெ.ஜெயசீலன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.