அகில இந்திய வேலை நிறுத்தம் – கோவை மண்டல மாநாடு

அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 20.05.25 நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களின் உழைக்கும் மக்கள் பங்கேற்ற வேலை நிறுத்த மண்டல ஆயத்த மாநாடு, கோவையில் 09.04.25 அன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஏஅய்சிசிடியு தொழிற்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தோழர் பாலசுப்பிரமணியம், திருப்பூர் தோழர் முத்துகிருஷ்ணன், ஈரோடு ஜே பி கார்த்திகேயன் உட்பட மாவட்ட அளவில் பணியாற்றக்கூடிய முன்னணி தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.