அது கலகத்தின் குரல்.
வெறும் கலகம் மட்டுமல்ல.
அது மானுட விடுதலையின் குரல்.
மானுட விடுதலை மட்டுமல்ல,
மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமத்துவ சமுதாயத்தைப் படைப்பதற்கான குரல்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) (விடுதலை) யின்
தமிழ்நாடு மாநில கமிட்டி
உயர்த்திப் பிடிக்கும் மக்கள் உரிமைக்கான குரல்.
நமது அன்பிற்குரிய தாய் நாட்டை பாசிச இருள் கவ்வி வருகிறது.
டாக்டர் அம்பேத்கர் தலைமைப் பங்காற்றி உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தை அகற்றிவிட்டு, அதனிடத்தில் மனு (அ)நீதியை சட்டமாக்கிட துடித்துக் கொண்டிருக்கிறது.
ஜனநாயகத்தை மண் தோண்டிப் புதைத்து, பாசிசத்தை நிலைநாட்ட துடிக்கிறது.
கார்ப்பரேட் கொள்ளையர்கள் செழித்து வளர்ந்திட பாசிச பாதையைப் பயன்படுத்துகிறது.
காலனி ஆதிக்க எதிர்ப்புப் போரில் உருவான நம் நாட்டை, சுதந்தரத்தை அந்நிய ஆதிக்க வெறியர்களிடம் அடகு வைக்கிறது.
அரச ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதற்கு அக்கம்பக்கமாகவே வன்முறை அரசியலை, வெறுப்பு அரசியலை பொதுப்புத்தியாக்கிட முயற்சித்து வருகிறது.
கூட்டமைப்புத் தத்துவத்தை, கூட்டாட்சி முறையைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு, அதிகாரத்தை ஒன்றிய அரசின் கையில், மோடி எனும் ஒற்றை மனிதனின் கையில் குவித்து வருகிறது.
பெரியாரின், தமிழ்நாட்டின் முற்போக்கு விழுமியங்களைத் துடைத்தெறிய கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது.
பாசிச சக்திகளை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றுவது என்பது இந்திய மக்களின், தமிழக மக்களின் முதல் கடமையாக முன்வந்திருக்கிறது.
இடதுசாரிகள், அம்பேத்கரிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள், முற்போக்குவாதிகள், ஜனநாயாக ஆர்வலர்கள் அனைவரும் கரம் கோர்த்து பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திட வேண்டும்.
அதே வேளையில், தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக, உழைக்கும் மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்படுவார்களேயானால், அதையும் கூட சமரசமின்றி எதிர்த்துப் போராட வேண்டும்.
கார்ப்பரேட் ஆதரவு அரசியல், மதவெறி அரசியல், மனுவாத அரசியல், பாசிச சக்திகளுக்கு எதிராகப் போராடுவதே எதிர்ச் சொல்.
எதிர்ச் சொல் குழு
ஆசிரியர்
பாலசுந்தரம்
ஆசிரியர் குழு
ஆசைத் தம்பி
சந்திர மோகன்
ரமேஷ்
தேசிகன்
சிம்சன்
விஜி
இணைய ஏடு வடிவமைப்பு – பராமரிப்பு – நிர்வாகம்
விஜி
பாரதி
அருண்
முகவரி
எதிர்ச் சொல்
இணைய தள ஏடு
3/254 பி, ஜீவா தெரு, வண்டலூர், சென்னை – 600 048